தமிழ்த்துறை

இனிமை தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது

என்ற வாக்கிற்கிணங்க நம் தாய்மொழியாகிய தமிழ்மொழியை மாணவர்கள்
ஆர்வத்துடனும், தெளிவுடனும் கற்க தமிழ்த்துறை ஆசிரியர்கள் இனிதே செயலாற்றி வருகின்றனர்.ஆசிரியர் என்பவர்      ஒழுக்கத்திற்கு சான்றாக,

கற்பிப்பதில் வல்லவராக
மேம்படுத்துவதில் முற்போக்கு எண்ணமுடையவராக 

புதிய சிந்தனைச் செல்வராக 

இலக்கிய, இலக்கணத்தை நயத்துடன் கற்பிப்பவராக இருக்க வேண்டும். அவ்வாறான ஆசிரியர்களை மேலும் உற்சாகப்படுத்தி, பன்முக வித்தகர்களாக விளங்க வைக்க பாலர்நிலையின் தமிழ்த்துறை தலைவியாக திருமதி.செ.புனிதாஅவர்களும், இளநிலையின் தமிழ்த்துறை தலைவியாக திருமதி.கிரேஸ் எஸ்தர் மேரி ஆகிய இருவரின் தலைமையில் தமிழ்த்துறை ஆசிரிய, ஆசிரியைகள் தங்கள் பணிகளைச் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். 

தமிழ்த்துறை தலைவி

திருமதி.கிரேஸ் எஸ்தர் மேரி

M.A.,B.Ed.

பாலர்நிலையின் தலைவி

திருமதி.செ.புனிதா

M.A.,B.Ed.

வளமிகு இன்றமிழ்:-

பாலர் நிலையில் இலக்கணங்கள், செய்யுள் பகுதி இவை அனைத்தும் பாடல்கள் மற்றும் நடனத்தின் மூலம் கற்பிக்கப்படுகின்றன.

‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற தொடருக்கேற்ப வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வகுப்பறைகளில், செய்தித்தாள்கள், சிறுவர் மலர்கள் போன்றவை வாசிக்கப்பட்டு, மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேலும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் துணைகொண்டு நேரில் காணமுடியாதவற்றை, SMART BOARD மூலம் காண்பிக்கப்பட்டு, பாடப்பகுதிகள் கற்பிக்கப்படுகின்றன.

பைந்தமிழின் அழகு இலக்கணம்’ செய்யுள்ளோடு இயைந்து கற்றுத்தரப்படுகிறது.

தமிழுடன் பிணைந்த வாழ்க்கை:-

“வாழ்வின் எண்ணங்களை அழகாக்க, ஒழுக்கமே உயர்வு தரும்” என்பதற்கிணங்க, அனைத்து வகுப்புகளிலும் சிறு சிறு நல்லொழுக்கக் கதைகள் கூறப்பட்டு, மாணவர்கள் நல்வழிப்படுத்தப்படுகின்றனர். பெற்றோர், பெரியோர்களுக்குக் கீழ்படிதல், மென்மையாக, அன்பாகப் பழகுதல், விட்டுக்கொடுத்தல் போன்ற நற்பண்புகள் மாணவர்களிடையே வளரும் வகையில்,கதைகள் பாடத்தோடு சேர்த்தே கற்பிக்கப்படுகின்றன.

அழகுமிகு நற்றமிழ்:-

கண்ணுக்கு இமை அழகு
கவிதைக்குக் கருத்து அழகு
மொழி வடிவத்திற்கு கையெழுத்து அழகு

என்பது போல, எம் பள்ளி மாணவர்கள் ஒலியுடனும், வரிவடித்துடனும், இரண்டு வரி
ஏட்டில் எழுத, பயிற்சி தரப்படுகிறது. போதிய இடைவெளி விட்டு, அழகாக எழுதவும்
ஆசிரியர்களால் ஊக்கப்படுத்தப்பட்டு வழிநடத்தப்படுகின்றனர்.

மாணவர்களின் தனித்தமிழ்:-

பெருமை மிகுந்த தமிழின் பெருமையை மாணவர்கள் அறிந்து உணர்ந்து கொள்ள பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மனனத் திறமையை வளர்க்க – திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
பேச்சுக் கலையைப் பேண – பேச்சுப்போட்டி
கற்பனைத் திறனைக் கூட்ட – கவிதைப் போட்டி
அழகாகவும், விரைவாகவும் எழுத – கையெழுத்து போட்டி
தொகுத்தல், தொகுத்ததைப் பகுத்தல் – கட்டுரைப்போட்டி
நடிப்புத்திறனை வெளிப்படுத்த – நாடகங்கள்
சிந்தனைத் திறனை மேம்படுத்த – வினாடி வினா.

மேலும் தமிழ்க்கண்காட்சி, தமிழ் இலக்கிய மன்ற விழா போன்ற நிகழ்ச்சிகள்
நடத்தப்படுகின்றன.
உவக்குந்தமிழ்:-

“தமிழ் இனிமை மட்டுமல்ல என்றென்றும்
இளமையானதும் கூட”

செந்தமிழின் சிறப்பை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழ்த்துறை
சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.

“தாய்மொழியை நேசிப்போம்”
ஆர்வமுடன் கற்போம், கற்பிப்போம்.

Enlight your Future

Initiatives are set up in the system to implement modern updates and corrections in implanting quality education with the latest technique and upgrading the infrastructure to accelerate progress towards quality universal standards of education.

Or call us : 044 2746 7986